மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4 ஆயிரத்து 171 கன அடியாக குறைவு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4 ஆயிரத்து 171 கன அடியாக சரிந்துள்ளது.

கர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ண ராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. இதனால்அந்த அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது.

கடந்த மாதம் 2 அணைகளில் இருந்தும் 13 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் தற்போது தண்ணீர் திறப்பு 6 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டு உள்ளது. இதனால் மேட்டூர்அணைக்கு நீர்வரத்து நாளுக்கு நாள் சரிந்து வருகிறது.

கடந்த 4-ந் தேதி மேட்டூர் அணைக்கு 8 ஆயிரத்து 32 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று 5 ஆயிரத்து 699 கன அடியாக சரிந்தது. இன்று நீர்வரத்து மேலும் சரிந்து 4 ஆயிரத்து 171 கன அடியாககுறைந்துள்ளது. குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது.

Related Posts