மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 5 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.

அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்படுகிறது. அணையிலிருந்து கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 800 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது. கடந்த 13ம் தேதி காவிரி டெல்டா பாசனத்திற்காக திறந்து விடப்பட்ட தண்ணீர், கடைமடை பகுதியை இன்னும் சென்றடைய வில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், கேரள மாநிலம் வயநாட்டிலும் பெய்த கனமழை  காரணமாக, கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பியது. இதையடுத்து, பாதுகாப்பு கருதி இரு அணைகளிலிருந்தும் விநாடிக்கு 3 லட்சம் கனஅடி வரை காவிரியில் உபரிநீர் வெளியேற்றப்பட்டது. இதனால், மேட்டூர்  அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து,  அணையின் நீர்மட்டம் 117.22 கனஅடியாக உயர்ந்தது.

Related Posts