மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 35 ஆயிரம் கன அடி நீர்வரத்து

கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவானது விநாடிக்கு 69 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 35 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், கே.ஆர்.எஸ்., கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கபினி அணைக்கு விநாடிக்கு 24 ஆயிரத்து 321 கன அடி நீரும், கே.ஆர்.எஸ் அணைக்கு விநாடிக்கு 44 ஆயிரத்து 727 கன அடி நீரும் வந்து கொண்டிருக்கிறது. 84 அடி கொண்ட கபினி அணை, 83.4 அடியை எட்டியது. இதேபோல், 124.8 அடி கொள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ். அணை நிரம்பி விட்டது. இதன் காரணமாக, அந்த இரு அணைகளில் இருந்தும் காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவானது வினாடிக்கு 69,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கபினியில் இருந்து வினாடிக்கு 20,000 கன அடி நீரும், கே.ஆர்.எஸ்-சில் இருந்து வினாடிக்கு 49,000 கன அடி நீரும் காவிரியில் திறக்கப்படுகிறது.

Related Posts