மேட்டூர் அணையின் நீர்வரத்து குறைவு

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த மழையின் அளவு குறைந்துள்ளதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் குறைந்துள்ளது.

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 17 ஆயிரம் கன அடியில் இருந்து 14 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது. இந்நிலையில் அணையின் நீர்மட்டம் 93 புள்ளி 47 டி.எம்.சியாக உள்ளது. டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 14 அயிரம் கன அடிநீர் வெளியேற்றப்பட்ட நிலையில், தற்போது 12 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்கு தொள்ளாயிரம் கன அடியிலிருந்து 600 கன அடியாக குறைத்து, தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

Related Posts