மேட்டூர் அணையின் 16 கண் மதகுகள் வழியாகத் தண்ணீர் திறப்பு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளதால் அணையின் 16 கண் மதகுகள் வழியாகத் தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டுள்ளது.

கர்நாடகத்தில் இருந்து காவிரியில் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்றுமாலை வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடியாகக் குறைந்தது. இதனால் மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து வினாடிக்கு 21 ஆயிரம் கனஅடியாகக் குறைந்தது. நேற்றிரவு 8 மணி நிலவரப்படி அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 23 ஆயிரத்து தொள்ளாயிரம் கனஅடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. அணை முழுவதும் நிரம்பியிருந்தாலும் நீர்வரத்துக் குறைந்ததால் 16 கண் மதகுகள் வழியாகத் தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டு விட்டது.

 

Related Posts