மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

நாகை : மே-20

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய மு.க.ஸ்டாலின், கர்நாடக அரசுடன் தமிழக அரசு நட்புடன் பழகி காவிரியில் நீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12ம் தேதி நீர் திறக்காவிட்டால் திமுக சார்பில் விவசாயிகளுடன் சேர்ந்து போராட்டம் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.

Related Posts