மேட்டூர் அணை நீர்திறப்பும் விநாடிக்கு 50ஆயிரம் கன அடியாகக் குறைவு

மேட்டூர் அணைக்கு, நீர்வரத்து, விநாடிக்கு 59 ஆயிரம் கன அடியாகக் குறைந்துள்ள நிலையில், நீர்திறப்பும் விநாடிக்கு 50ஆயிரம் கனஅடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.

பிலிகுண்டுலு வழியாக நேற்று விநாடிக்கு 70 ஆயிரம் கனஅடியாக வந்துகொண்டிருந்த நீர், இன்று 55 ஆயிரம் கனஅடியாகக் குறைந்துள்ளது. கர்நாடகாவில் இருந்து காவிரியில் தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு இன்று 21,725 கன அடியாக குறைந்துள்ள நிலையில், பிலிகுண்டுலு வழியாக வரும் நீரின் அளவு வரும் நாட்களில் மேலும் குறையும். இன்று காலை நிலவரப்படி, ஒகேனக்கல்லில் வினாடிக்கு 55 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் பாய்ந்து கொண்டிருக்கும் நிலையில், ஏழாவது நாளாக பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அருவியில் குளிக்க 37வது நாளாக தடை நீடிக்கிறது. இந்நிலையில் மேட்டூர் அணைக்கு நேற்று விநாடிக்கு 68 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை 59 ஆயிரம் கனஅடியாகக் குறைந்துள்ளது. இதையடுத்து, நேற்று விநாடிக்கு 65 ஆயிரத்து 900 கனஅடியாக இருந்த நீர்திறப்பு, இன்று 50 ஆயிரத்து 900 கனஅடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 120.70 அடியாகவும், நீர்இருப்பு 94.59 டிஎம்சி ஆகவும் உள்ளது. டெல்டா பாசனத்திற்கு அணையில் இருந்து வினாடிக்கு 50,000 கன அடி நீரும், கிழக்கு ,மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு  900 கன அடி நீரும் திறக்கப்படுகிறது.

Related Posts