மேட்டூர் அணை நீர்வரத்து 20 ஆயிரம் கன அடியாக குறைவு

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து நொடிக்கு 20 ஆயிரம் கன அடியாக குறைந்து விட்டது.

கர்நாடக அணை நீர்பிடிப்புப் பகுதிகளில் மழை நின்றதால், கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது. இரு அணைகளில் இருந்தும் திறக்கப்படும் நீரின் அளவானது தற்போது நொடிக்கு 11 ஆயிரத்து 96 கன அடியாக உள்ளது. இரு மாநில எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நொடிக்கு 18 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஒகேனக்கல்லிலும் இதே அளவு நீர் பாய்கிறது. எனினும் அங்கு சுற்றுலாப் பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் விதிக்கப்பட்ட தடை நீடிக்கிறது. மேட்டூர் அணைக்கு 23 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில், காலை 8 மணி நிலவரப்படி 20 ஆயிரம் கன அடியாக குறைந்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக, நொடிக்கு 10 ஆயிரம் கன அடியும், கால்வாய் பாசனத்திற்காக நொடிக்கு 500 கனஅடி வீதமும் தண்ணீர் திறக்கப்படுகிறது.

Related Posts