மேட்டூர் நீர்வரத்து வினாடிக்கு 24 ஆயிரம் கனஅடியாக சரிவு

மேட்டூருக்கு நீர்வரத்து வினாடிக்கு 24 ஆயிரம் கனஅடியாக சரிந்துள்ள நிலையில், அணையின் நீர்மட்டம் 116.25 அடியாக உயர்ந்துள்ளது.

120 அடியை நீர்தேக்கும் அளவை கொண்ட மேட்டூர் அணைக்கு கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் கேரள மாநிலம் வயநாட்டிலும் மழை பெய்த கனமழையாலும் நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்தது

இந்நிலையில் நேற்றைய நிலவரப்படி மேட்டூர் அணைக்கு 24 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி வீதமும், கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 500 கனஅடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவை விட அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் தொடர்ந்து நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று 114.85 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் இன்று 116.25 அடியாக  உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 86.95 டிஎம்சியாக உள்ளது. தொடர்ந்து இதே அளவு தண்ணீர் வந்தால் அணை முழு கொள்ள்ளவை எட்டிவிடும் என எதிர்பர்க்கப்படுகிறது.

Related Posts