மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு

இது குறித்த வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில்,  வெப்பசலனம் காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், தேனி,கோவை, திண்டுக்கல், நெல்லை, சேலம், ஈரோடு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.  சென்னையை பொறுத்தவரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும்  தமிழகத்தில் படிப்படியாக வெப்பம் குறைந்து வருவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில், வேடசந்தூரில் 7 சென்டிமீட்டரும், , தேவாலாவில் 4 சென்டி மீட்டரும், பெரியாறு, நடுவட்டம் பகுதிகளில் 2 சென்டிமீட்டரும்  மழை பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, சென்னையின் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மழை பெய்தது. திருவள்ளூர் மாவட்டத்தின் பல பகுதிகளிலும், காஞ்சிபுரம், திருத்தணி உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த காற்றுடன் நேற்று மழை பெய்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Related Posts