மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யும்

வட தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மத்திய மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள ஆந்திர கடல் பகுதிகளில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அடுத்த 12 மணி நேரத்தில் இது காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக வாய்ப்பிருப்பதால், ஆந்திரா, தெலுங்கானா, வடதமிழகம்  மற்றும் உள்கர்நாடகவில் அடுத்த 3 நாட்களுக்கு  பரவலாக  கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.  இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை மையம் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மன்னார் வளைகுடாவில் தமிழகத்தை ஒட்டிய கடல் பகுதியில் 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் எனவும், வடதமிழகம், தெற்கு ஆந்திரா மற்றும் அந்தமான் பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படும் எனவும் அவர்கள் கணித்துள்ளனர். எனவே, மீனவர்கள் மீன்பிடிக்கசெல்ல வேண்டாம் என அவர்கள் எச்சரித்துள்ளனர்.

Related Posts