மேல்விஷாரம் பீடி குடோனில்  தீ விபத்து   பீடி இலைகள் எரிந்து கருகியது

வேலூர் மாவட்டம் ஆற்காடு அடுத்த மேல் விஷாரம் பகுதியில் பீடி இலைகள் சேமித்து வைத்திருக்கும் குடோனில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஆற்காடு தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் 2 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் 80 லட்சம் மதிப்பிலான பீடி இலைகள் ஏரிந்து நாசமனது தெரியவந்தது.  தீ விபத்தில் திர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதும் ஏற்படவில்லை. தீயின் காரணமாக அப்பகுதியை புகை சூழ்ந்த்தால் பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டது.

Related Posts