மே 23ந் தேதிக்குப் பிறகு தமிழகத்தில் எடப்பாடி ஆட்சி இருக்கப் போவதில்லை  மு.க. ஸ்டாலின் 

கோவை மாவட்டம் சூலூர் இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் பொங்கலூர் பழனிச்சாமியை ஆதரித்து சுல்த்தான்பேட்டை வாரப்பட்டி பகுதியில் திமுக தலைவர் ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், பிரதமர் மோடி ஒரு சேடிஸ்ட் எனவும்

அவர் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை எனவும் தெரிவித்தார். அதிமுகவின் 3 எம்.எல்.ஏ க்களை தகுதி நீக்கம் செய்ய உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில் ,ஜூலை மாதம் வரை நீதிமன்றம் கிடையாது எனவும் வழக்கை அவர்கள் மேல்முறையீடு செய்யமுடியாது எனவும் தெரிவித்தார். வரும் 23 ம் தேதி தேர்தல் முடிவு வந்து விடும் எனவும் மே 23க்குப் பிறகு தமிழகத்தில் எடப்பாடி ஆட்சி இருக்கப்போவதில்லை எனவும் அவர் கூறினார்.

Related Posts