மே 24ம் தேதி தமிழக சட்டப்பேரவையின் அலுவல் ஆய்வுக்குழுக் கூட்டம்

 

 

தமிழக சட்டப்பேரவையின் அலுவல் ஆய்வுக்குழுக் கூட்டம் வரும் 24ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் கடந்த மார்ச் 15ஆம் தேதி 2018-19ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து மார்ச் 19ஆம் தேதி முதல் மார்ச் 22ஆம் தேதி வரை நிதி நிலை அறிக்கை மீதான விவாதம் சட்டப்பேரவையில் நடைபெற்றது. அதன்பிறகு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர், மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், துறைவாரியான மானியக் கோரிக்கைகள் மற்றும் நிதி ஒப்புதலுக்காக வரும் மே 29ஆம் தேதி காலை பத்தரை மணிக்கு சட்டப்பேரவை கூடும் என்று, பேரவைச் செயலாளர் சீனிவாசன் அறிவித்தார். மேலும், சட்டப்பேரவை கூடும் நாளன்று மாலையே சபாநாயகர் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழுக் கூட்டம் நடைபெறும் என கூறப்பட்ட நிலையில், மே 24ஆம் தேதியே அலுவல் ஆய்வுக்குழுக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில், சட்டப்பேரவையை எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது குறித்து முடிவு செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.

Related Posts