மே 30ஆம் தேதிக்குள் நிதிபத்திரம் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு

 

அரசியல் கட்சிகளுக்கு யார் வேண்டுமானாலும் நிதி அளிக்கலாம் என்ற முறையை மாற்றி, தேர்தல் நிதி பத்திரம் மூலம் மட்டுமே கட்சிகளுக்கு நிதி வழங்கும் முறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.

நிதி வழங்க விரும்பவர் வங்கியில் டிடி பெறுவது போன்று நிதி பத்திரத்தை பெற்று கட்சிகளுக்கு வழங்கினால், அதை பெறும் கட்சிகள் வங்கிகளிடம் சமர்பித்து பணமாக பெற்று கொள்ளலாம். இதன்மூலம் அனைத்து கட்சிகளின் நிதிகளும் கணக்குக்குள் வருவதோடு கருப்புப் பணமும் ஒழிக்கப்படும் என்பதன் அடிப்படையில் இந்த முறை அமல்படுத்தப்பட்டது.

இந்நிலையில், அனைத்து கட்சிகளும் தங்களுக்கான தேர்தல் நிதி பத்திரம் குறித்து மே 30-ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்திடம் அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Posts