மைனாரிட்டி நாற்காலியை காப்பாற்ற அதிமுக எம்.எல்.ஏ.க்கள் பூதம் போன்று பழிவாங்குகிறதுள் முரசொலி நாளிதழ்

எது ஜனநாயகம் எது கள்ள உறவு என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை முரசொலி நாளிதழ் வெளியிட்டுள்ளது.

அதில், அதிமுக என்ற பூதத்திற்கு நேற்று 18 பேரும், இன்று 3 பேரும் இரையாகியிருப்பதாகவும், நாளை மேலும் 6 பேர் இரையாகப் போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக எம்.எல்.ஏக்கள் யார் யார் எடப்பாடி அணி, பன்னீர்செல்வம் அணி, தினகரன் அணி, ஜெயக்குமார் அணி என்பது தங்களுக்கு தெரியும் என்றும், அந்தக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மைனாரிட்டி நாற்காலியை காப்பாற்ற சட்டமன்ற உறுப்பினர்களை பூதம்போல் பழி வாங்குவது ஏன்? என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

 

தமிழக சட்டமன்றத்தில் காலி இடங்களை உருவாக்குவதன் மூலமாக குறைந்தளவு எண்ணிக்கையை காட்டி தனது மைனாரிட்டி அரசை தக்க வைக்க முதல்வர் பழனிசாமியின் கூட்டம் திட்டமிடுகிறது எனவும் அக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Related Posts