மொனாக்கோ கிராண்ட் பிரி கார்பந்தயம் – டேனியல் ரிக்கியார்டோ சாம்பியன்

மொனாக்கோ கிராண்ட் பிரி கார்பந்தயப் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் டேனியல் ரிக்கியார்டோ சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.

மாண்டே கார்லோ : மே-28

நடப்பு சீசனில் 21 கிராண்ட் பிரி கார்பந்தயப் போட்டிகள் நடத்த முடிவு செய்யப்பட்டு, 5 பந்தயங்கள் நடைபெற்று முடிந்துள்ளன. இந்நிலையில், மொனாக்கோ கிராண்ட் பிரி கார்பந்தயம் மாண்டே கார்லோவில் நடைபெற்றது. பல்வேறு அணிகளைச் சேர்ந்த முன்னணி வீரர்கள் போட்டி போட்டுக் கொண்டு முந்திச் செல்ல முயன்ற காட்சி அங்கிருந்த ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை மெய்சிலிர்க்கச் செய்தது. 260 கிலோ மீட்டர் பந்தய தூரத்தை, ஒரு மணி 10 நிமிடம் 8 வினாடிகளில் கடந்து ரெட்புல் அணியின் டெனியல் ரிக்கியார்டோ சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார். ஜெர்மனி வீரர் செபஸ்டியன் வெட்டல், பிரிட்டன் வீரர் ஹாமில்டன் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் வந்தனர். நடப்பு சீசனில் 110 புள்ளிகளுடன் ஹாமில்டன் முதலிடத்திலும், 96 புள்ளிகளுடன் வெட்டல் இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.

Related Posts