மோசடி நடந்துள்ளதற்கு யார் பொறுப்பு : பிரியங்கா காந்தி கேள்வி

வங்கிகளில், 72 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல், மோசடி நடந்துள்ளதற்கு, யார் பொறுப்பு என காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

ரிசர்வ் வங்கியின் அறிக்கையை சுட்டிக்காட்டி, தமது டுவிட்டர் வலைப்பக்கத்தில், வங்கி மோசடி அதிகரித்து விட்டது என அவர் பதிவிட்டுள்ளார்.

இதுபோன்ற மிகப்பெரிய வங்கி மோசடி நடக்க அனுமதித்தது யார் என கேள்வி எழுப்பி உள்ள பிரியங்கா காந்தி, மத்தியில் பாஜக ஆட்சி அமைந்தபின், வங்கி மோசடிகள், தொடர் கதையாகி விட்டதாக தமது டுவிட்டர் பதிவில் குற்றஞ்சாட்டி உள்ளார்.

Related Posts