மோடிக்கு எதிராக நீதிமன்ற உத்தரவை அவமதித்து பேசிய வழக்கு:  ராகுல்காந்தி பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றம்சாட்டி வரும் ராகுல்காந்தி, நாட்டின் காவலாளியான பிரதமர் ஒரு திருடர் என்பதை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளதாக தனது சுட்டுரைப்பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதையடுத்து ராகுல்காந்திக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில்,பாஜகவை சேர்ந்த மீனாட்சி லேகி என்பவர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். அதில் ரபேல் ஒப்பந்தம் குறித்த வழக்கில் பிரதமர் குறித்து உச்சநீதிமன்றம் எந்த கருத்தும் தெரிவிக்காத நிலையில், உச்சநீதிமன்ற உத்தரவை தவறாக ராகுல்காந்தி குறிப்பிட்டுள்ளதாக குற்றம்சாட்டியிருந்தார். இந்த வழக்கு  உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.  அப்போது இந்த வழக்கில் அடுத்த வாரம் திங்கட்கிழமைக்குள்  பதிலளிக்க ராகுல்காந்திக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை வரும் 22 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

Related Posts