மோடிக்கு எதிராக மாநிலக் கட்சிகள் ஒன்றிணைவோம்: ஆ.இராசா

நீலகிரி  மக்களவைத் தொகுதியில் திமுக தலைமையிலான மதசார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் ஆ.ராசா நொண்டிமேடு ,  சேரிங்கிராஸ்,  மார்கெட், மெயின்பஜார் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.

அப்போது பேசிய அவர், , மக்களவைத் தேர்தலில் மத்தியில்   எதிர்க்கட்சிகளுக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றாலும், மோடிக்கு எதிராக மாநிலக் கட்சிகள் ஒன்றிணைவோம் எனக் கூறினார். தொடர்ந்து பேசிய அவர்,   நீலகிரி மாவட்டத்தில்  வேலைவாய்ப்புகளை உருவாக்கவும்,  எச்பிஎஃப்  தொழிற்சாலையை  நவீன மருத்துவமனையாக  மாற்றவும்  நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

(பைட்)

பிரச்சாரத்தின் போது மாவட்ட செயலாளர் பா.மு.முபாரக்,   தேர்தல் பணிக்குழு செயலாளர் கா.இராமச்சந்திரன்,    நகர.செயலாளர் ஜார்ஜ்,    மாவட்ட துணை தலைவர் ரவிக்குமார் ,   தலைமை செயற்குழு உறுப்பினர் முஸ்தாபா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Related Posts