மோடிக்கு ஏற்ற எடப்பாடி பழனிசாமி: கொட்டும் மழையில் மு.க.ஸ்டாலின் பேச்சு

 

 

ஜாடிக்கு ஏற்ற மூடி என்பது போல், பிரதமர் மோடிக்கு ஏற்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி என்று கொட்டும் மழையில் நனைந்தபடி திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

தஞ்சை, ஏப்ரல்-09

காவிரி உரிமை மீட்பு பயணத்தை இன்று 3-வது நாளாக தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தஞ்சையில் தொடங்கினார்.
தஞ்சை அடுத்த அன்னப்பன்பேட்டையில் பயணத்தை தொடங்கிய அவருடன் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மத்திய குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் இரா.முத்தரசன், டி.ஆர்.பாலு, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இன்று காலை அன்னப்பன்பேட்டையில் இருந்து பல்வேறு கிராமங்களுக்கு சென்ற ஸ்டாலின் சாலியமங்கலம் அருகே அம்மாபேட்டை புத்தூரில் வேனில் இருந்தப்படியே பேசினார்.

அப்போது அங்கு திடீரென மழை பெய்தது. கொட்டும் மழையில் குடை பிடித்தப்படி தொண்டர்கள், பொதுமக்கள் மத்தியில் மு.க.ஸ்டாலின் பேசினார். 

அப்போது அவர் கூறியதாவது ;-

எதிர்க்கட்சியான நாங்கள் 9 கட்சிகளுடன் சேர்ந்து காவிரி உரிமை மீட்பு பயணத்தில் ஈடுபட்டு வருகிறோம். மத்திய- மாநில அரசுகள் தொடர்ந்து தமிழக விவசாயிகளுக்கு துரோகம் செய்து வருகின்றன.தூங்குபவர்களை எழுப்பி விடலாம். ஆனால் தூங்குவது போல் நடிக்கும் மத்திய அரசை எழுப்ப முடியாது. மத்திய அரசுக்கு துணையாக எடுபிடி அரசாக எடப்பாடி அரசு உள்ளது.ஜாடிக்கேற்ற மூடி என்ற பழமொழிக்கேற்ப மோடிக்கேற்ற எடப்பாடி அரசு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Posts