மோடிக்கு ‘குளோபல் கோல்கீப்பர் விருது’

தூய்மை இந்தியா திட்டத்திற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு ‘குளோபல் கோல்கீப்பர் விருது’ வழங்கப்பட்டுள்ளது.

வீடுகளில்  கழிவறைகள் கட்டுவது, பொதுக்கழிப்பறைகள் அமைப்பது, திடக் கழிவு மேலாண்மை உருவாக்குவது உள்ளிட்டவற்றை நோக்கமாக கொண்டு ஸ்வச் பாரத் என்ற திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தை பாராட்டும் வகையில் அமெரிக்காவின் பில் மற்றும் மெலிந்தா கேட்ஸ் நிறுவனம் உலக கோல்கீப்பர் விருது பிரதமர் மோடிக்கு  வழங்கப்படும் என கடந்த சில மாதங்களுக்கு முன் அறிவித்தது. அதன்படி, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் மற்றும் மெலிந்தா கேட்ஸ்  அறக்கட்டளை சார்பில் ‘குளோபல் கோல்கீப்பர்’ விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பேசிய மோடி, இந்த விருது தனக்கானது அல்ல என்றார்.  ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை நிறைவேற்றியதுடன், அதனை தங்களது அன்றாட வாழ்வின் ஒருபகுதியாக மாற்றிய கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு விருதை சமர்ப்பிப்பதாக அவர் கூறினார். ஃபிட் இந்தியா திட்டம் மூலம் உடலுறுதி மற்றும் உடல்நலனை பேணிக்காக்க ஊக்கப்படுத்தி வருவதாகவும் மோடி தெரிவித்தார்.

Related Posts