மோடிக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் ராக்கி அணிவித்து வாழ்த்து

ரக்சா பந்தனை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடிக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் ராக்கி அணிவித்து வாழ்த்துக்களை பறிமாறிக் கொண்டனர்.

சகோதரத்துவ நாளான ரக்சாபந்தன் நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஒருவருக்கொருவர் ராக்கி அணிவித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த பெண்கள் மற்றும் குழந்தைகள் ரக்சா பந்தன் வாழ்த்து தெரிவித்தனர். ராக்கி கட்டியும் வாழ்த்து அட்டை வழங்கியும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர்

Related Posts