மோடியால் மீண்டும் பிரதமராக முடியாது, அதற்கான மனமாற்றம் மக்களிடம் வந்து வந்துவிட்டது: கமல்ஹாசன்

ஈரோடு தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளரை ஆதரித்து கோபிசெட்டிபாளையத்தில் கமல்ஹாசன் பிரசாரம் செய்தார். அப்போது பேசிய அவர், வரும் மக்களவை தேர்தல், பிரதமரை தேர்ந்தெடுக்க வேண்டிய தேர்தல் அல்ல, நம் பிரதிநிதியை தேர்ந்தெடுக்க வேண்டிய தேர்தல் என தெரிவித்தார்.  மோடியால் மீண்டும் பிரதமராக முடியாது எனவும் அதற்கான மனமாற்றம் மக்களிடம் வந்து விட்டதாகவும் அவர் கூறினார். பிரதமரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அல்ல எனவும் நம்மை தேர்வு செய்வதற்கான தேர்தல் எனவும் அவர் கூறினார். காமராஜர், எம்ஜிஆர் போன்றோர் அதிகம் படிக்காவிட்டாலும் மக்களை படித்தவர்கள் என்று அவர் தெரிவித்தார்.

Related Posts