மோடியின் பெயரை நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும்

இந்தியாவில் உள்ள 50 கோடி மக்கள் பலன் பெறும் மருத்துவ காப்பீடு திட்டத்தை அறிமுகம் செய்த மோடியின் பெயரை நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை, தியாகராயர் நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் பாஜக நிறுவனர்  தீனதயாள் உபாத்யாயாவின் 101 ஆவது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டது  இதில் கலந்து கொண்ட தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது,  பிரதமரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தினால் பல ஏழை மக்கள் பயனடைவார்கள் எனவும், இத்திட்டத்தை அறிமுகம் செய்த மோடியின் பெயரை நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் எனவும் கூறினார்.

தாமிரபரணி புஷ்கரணி விழாவற்கு  தமிழக அரசு பாதுகாப்பு அளிக்க முடியாது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தென்காசியில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

எத்தானால் மூலம் எரிசக்தியை தயாரிக்க மத்திய அரசு எல்லா நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகவும், பெட்ரோல் டீசல் விலை உயர்வை காரணம் காட்டி பேருந்துகளின் கட்டணத்தை தமிழக அரசு உயர்த்தக் கூடாது எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

Related Posts