மோடியும் அமித்ஷாவும் ராஜ தந்திரத்துடன் கையாண்டுள்ளனர் : ரஜினிகாந்த்

எதை அரசியலாக்க வேண்டும், எதை அரசியல் ஆக்கக்கூடாது என்பதை சில அரசியல்வாதிகள் புரிந்துகொள்ள வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

சென்னை போயஸ் கார்டனில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழ் திரைப்படங்களுக்கு தேசிய விருது கிடைக்காதது ஏமாற்றம் அளிக்கிறது என்று கூறினார்.

காஷ்மீர் விவகாரத்தை பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் ராஜ தந்திரத்துடன் கையாண்டுள்ளதாகவும், அதனால்தான் அவர்களை கிருஷ்ணர், அர்ஜுனன் போன்றவர்கள் என்று கூறியதாக தெரிவித்தார்.

காஷ்மீர் விவகாரம் நாட்டின் பாதுகாப்பு தொடர்பான பிரச்சனை என்பதால் பாராட்டு தெரிவித்த்தாக கூறிய அவர், எதை அரசியலாக்க வேண்டும், எதை அரசியல் ஆக்கக்கூடாது என்பதை சில அரசியல்வாதிகள் புரிந்துகொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார்.

போயஸ் தோட்டம் அரசியல் களத்தின் மையமாகுமா என்பதை பொறுத்திருந்து பாருங்கள் என அவர் கூறினார்.

Related Posts