மோடியையும், அமித் ஷாவையும் தோற்கடிக்க எதுவும் செய்வோம்: அர்விந்த் கேஜரிவால்

டெல்லியில் எதிர்க்கட்சிகளின் சார்பில் ‘‘ஜனநாயகத்தை பாதுகாப்போம்’ என்ற பெயரில் வாக்குப்பதிவு இயந்திர முறைகேடு தொடர்பான கருத்தரங்கம் நடைபெற்றது.

இந்த கருத்தரங்கில் காங்கிரஸ், தெலுங்கு தேசம், ஆம் ஆத்மி, தி.மு.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்களும் பிரதிநிதிகளும்  கலந்துகொண்டு பேசினர்.

கருத்தரங்கின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய டெல்லி முதலமைச்சர் அர்வித் கெஜ்ரிவால்,  நாடு தற்போது ஆபத்தில் உள்ளது என்றார்.  பிரதமர் மோடியையும், பாரதிய ஜனதா தலைவர் அமித் ஷாவையும் தோற்கடிக்க எதுவும் செய்வோம் எனவும் அவர்களை தோற்கடித்து, அவர்களிடம் இருந்து நாட்டை காப்பதற்கான தங்களது முயற்சி தொடரும் எனவும் அவர் தெரிவித்தார்.

Related Posts