மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார் பி.வி. சிந்து

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்த பி.வி. சிந்து, டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

உலக பேட்மிண்டனில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ள பி.வி. சிந்துவுக்கு டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூயை நேரில் சந்தித்து சிந்து வாழ்த்து பெற்றார். எதிர்காலத்திலும் பல போட்டிகளில் வெற்றி பெற்று இந்தியாவுக்கு சிந்து புகழ் சேர்க்க வேண்டும் என்று கிரண் ரிஜிஜூ  வாழ்த்தினார். மேலும், 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை மத்திய அரசு சார்பில் சிந்துவுக்கு அவர் வழங்கினார். இதனைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து சிந்து வாழ்த்து பெற்றார். இது குறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ஒரு தங்கத்தையும் ஏராளமான பெருமையையும் வீட்டிற்கு கொண்டு வந்து சேர்த்த சாம்பியன் பி.வி.சிந்து என கூறியுள்ளார். அவரை சந்தித்தது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும், அவருக்கும், அவரது எதிர்கால முயற்சிகளுக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதாகவும் மோடி பதிவிட்டுள்ளார்.

Related Posts