மோடியை விமர்சித்து பேசிய ஷேக் ரஷீத் அகமதுக்கு மின்சார ஷாக்

பாகிஸ்தானில் பிரதமர் மோடியை விமர்சித்து பேசிய அந்நாட்டு ரயில்வே துறை அமைச்சர் ஷேக் ரஷீத் அகமதுக்கு மின்சார ஷாக் அடித்தது.

ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்துள்ள நிலையில், அந்த மாநில மக்களுக்கு தங்களது ஆதரவை தெரிவிக்கும் வகையில் நேற்று காஷ்மீர் ஹவர் என்ற பெயரில் பாகிஸ்தான் கடைப்பிடித்தது. அதன் ஒரு பகுதியாக தலைநகர் இஸ்லாமாபாதில் நடைபெற்ற பேரணியில் பாகிஸ்தான் ரயில்வே துறை அமைச்சர் ஷேக் ரஷீத் கான் கலந்துகொண்டு பேசினார்.

காஷ்மீர் விவகாரத்தில் பிரதமர் மோடியின் நோக்கம் என்ன என்பது தங்களுக்குத் தெரியும் என்று அவர் ஆவேசமாகப் பேசியபோது, கையில் பிடித்திருந்த மைக்கின் மூலம் அவருக்கு மின்சார அதிர்ச்சி ஏற்பட்டது. இதையடுத்து அவர் தனது பேச்சை உடனடியாக நிறுத்தினார்.
பிறகு சுதாரித்துக் கொண்டு பேச்சைத் தொடங்கிய அவர், மைக்கிலிருந்து மின்சார அதிர்வு ஏற்பட்டதாகவும், மக்கள் இதை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் எனவும் மோடியால் இந்தப் பேரணிக்கு இடையூறு ஏற்படுத்த இயலாது என்றும் பேசினார். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Related Posts