மோடியை வெறுக்கிறோம் என்று கூறி எதிர்க்கட்சிகள் நாட்டையே வெறுக்கிறார்கள்: பிரதமர் மோடி

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ராமநாதபுரத்தில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், ராமநவமி நாளன்று இந்த புனித பூமிக்கு வந்ததில் மகிழ்ச்சி அடைவதாகவும், நம்பிக்கையின் அடிப்படையில் காசியும் ராமநாதபுரமும் இணைக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.* ஆயுஷ்மான் பாரத்  திட்டத்தின் மூலம் 50 கோடிக்கு மேற்பட்டவர்களுக்கு  மருத்துவ காப்பீடு வழங்கப்பட்டுள்ளது எனவும், சுகாதார துறையில் இந்தியா பெரும் வளர்ச்சியை அடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மீனவர்கள் நலனுக்காக மே 23-ந்தேதி வெற்றி பெற்ற பிறகு மீன் வளத்துறை அமைச்சகம் அமைக்கப்படும் எனவும், விவசாயிகளுக்கான கிஷான் அட்டை மீனவர்களுக்கும் வழங்கப்படும் எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.  பாஜகவின் தேர்தல் அறிக்கை குடிநீர் வசதி செய்து கொடுப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கிறது எனவும், மூக்கையூர்,பூம்புகார் துறைமுகங்கள் மேம்படுத்தப்படும் எனவும்,  சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தியபோது நாட்டின் ராணுவத்தை காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அவமதித்தாகவும் அவர் குறிப்பிட்டார். காங்கிரஸ் மற்றும் திமுக வாக்கு வங்கி அரசியலில் ஈடுபடுவதாகவும், நாட்டுக்காக உழைத்த தலைவர்களை போற்ற காங்கிரஸ் எதுவும் செய்ததில்லை எனவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

முன்னதாக தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகனுமான ரவீந்திரநாத்குமாரை ஆதரித்து தேனியில் நடைபெற்ற பிரச்சார  பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி  உரையாற்றினார். அப்போது, வாரிசு மற்றும் ஊழல் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என மக்களை கேட்டுக்கொண்டார். கூட்டத்தில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், தமிழக அமைச்சர்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Related Posts