மோடி,  அமித்ஷா மீதான புகார்: மே.6 ம் தேதிக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும்  தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

பிரதமர் மோடி மீது தேர்தல் விதிமீறல் தொடர்பாக புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படுவது இல்லை எனவே தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என காங்கிரஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதன் மீதான விசாரணை உச்சநீதிமன்ற்த்தில் நேற்று நடைபெற்றது. வழக்கை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான பெஞ்ச் விசாரித்தது.

பிரதமர் மோடி, பா.ஜ., தலைவர் அமித்ஷா ஆகியோர் மீதான புகாரில் வரும் மே.6 ம் தேதிக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஏற்கனவே மோடி மீதான இரண்டு புகார்களில் தேர்தல் ஆணையம், நற்சான்று வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Posts