மோடி, அமித் ஷா உயிரோடு இருப்பதை சோனியா காந்தி குடும்பம் விரும்பவில்லை

மோடி, அமித் ஷா உயிரோடு இருப்பதை சோனியா காந்தி குடும்பம் விரும்பவில்லை என யோகா குரு பாபா ராம்தேவ் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நொய்டாவில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் உயிரோடு இருப்பதை சோனியா காந்தியும், ராகுல்காந்தியும் விரும்பவில்லை என்பது, அவர்களதப பேச்சுகள் மூலம் தெரிவதாக கூறியுள்ளார். பழிவாங்கும் நடவடிக்கையில் அமித் ஷா – மோடி கூட்டணி ஈடுபட்டிருந்தால், சோனியா காந்தியும், ராகுல்காந்தியும் வேறு இடத்தில் இருப்பார்கள் என அவர் கூறினார்.  நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம், திட்டமிட்டு சூழ்ச்சி செய்து அமித் ஷாவை சிறையில் தள்ளியதாகவும், அதனை ஒருபோதும் அவமரியாதையாக அமித்ஷா கருதவில்லை என்றும் அவர் தெரிவித்தார். சட்டத்தை மீறியதற்கான பலனை சிதம்ரம் அனுபவித்து வருவதாக கூறிய பாபா ராம்தேவ், இந்தியாவின் அரசு தன்னதுடையது என நினைத்தவர் திகார் ஜெயலில் இருப்பதாகவும் சாடினார்.

Related Posts