மோடி-அமித் ஷா கூட்டணி ஆட்சிக்கு வருவதை தடுக்க  கூட்டணி அரசுக்கு ஆதரவு:  அரவிந்த் கேஜரிவால் 

ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் அறிக்கை டெல்லியில்  இன்று வெளியிட்ட அவர் அதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, மோடி-அமித் ஷா கூட்டணியை தோற்கடிக்க எந்தவொரு மதச்சார்பற்ற கூட்டணிக்கும் ஆம் ஆத்மி ஆதரவு தெரிவிக்கும் என்றும்  டெல்லிக்கு  முழு மாநில அந்தஸ்து பெறுவதற்கான  போராட்டம் தொடரும் என்றும் தெரிவித்தார். இந்தியாவில் ஊடுருவியவர்களுள் இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் பௌத்தர்களை தவிர்த்து மற்றவர்கள்  வெளியேற்றப்படுவார்கள் என்று அமித் ஷா கூறியதை சுட்டிக்காட்டி பேசிய அவர்,  மூன்று மதங்களை தவிர்த்து மற்ற மதங்களை அகற்ற நினைக்கும் பாஜகவின் திட்டம் இதன்மூலம் உறுதியாகிறது எனவும் குறிப்பிட்டார். . எந்த கூட்டணியாவது சுட்டுரையில் அமைந்துள்ளதா? என்று ராகுல் காந்தியை வினவிய கெஜ்ரிவால், மோடியும், அமித் ஷாவும் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அதற்கு ராகுல் காந்தி தான் பொறுப்பு என்றார்.  மோடி-அமித் ஷா கூட்டணியை தடுப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் எனவும்,  நாட்டையும், ஜனநாயகத்தையும் பாதுகாக்க தான் இந்த தேர்தல் எனவும் அவர் தெரிவித்தார்.  முதலில் அனைவரும்இந்தியர்கள் என்று குறிப்பிட்ட கெஜ்ரிவால், மத ரீதியாகவும், ஜாதி ரீதியாகவும் பிரியாமல் இருந்தால்தான் நாட்டை காப்பாற்ற முடியும்” என்றார்.

Related Posts