மோடி அரசு மக்களின் உரிமைகளை புறக்கனிகின்றது: நாராயணசாமி 

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அவர் பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது,

மத்தியில் ராகுல்காந்தி தலைமையிலும், மாநிலத்தில் ஸ்டாலின் தலைமையிலும் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று தெரிவித்தார்.

மோடி தலைமையிலான அரசு தென்மாநில மக்களின் உரிமைகளை புறக்கணிப்பதாக குற்றம்சாடிய அவர், நீட் தேர்வு,  எட்டு வழிச்சாலை திட்டம், ஹைட்ரோகார்பன் திட்டம் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட மக்கள், தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

மோடி ஆட்சியில் தலித் மற்றும் சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பில்லை எனவும்,  7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள்  நிறைவேற்றப்படவில்லை எனவும் முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.

Related Posts