மோடி அலை எந்த காலத்திலும் ஓயாது : தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்

மோடி அலை எந்த காலத்திலும் ஓயாது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ,தெலுங்கானா, சத்தீஷ்கார், மிசோரம் ஆகிய  5 மாநிலங்களிலும் சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கியது. மத்திய பிரதேசம், ராஜஸ்தான் , சத்தீஷ்கார் மாநிலங்களில்  காங்கிரஸ் அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளது. தேர்தல் முடிவுகள் குறித்து  தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறுகையில்,வெற்றி பெற்றால் துள்ளிக்குதிக்க மாட்டோம், தோல்வியடைந்தால் துவள மாட்டோம் என்றார்.  நாடாளுமன்ற தேர்தலில் பாஜக நிச்சயம் வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்த அவர், பாஜக மோசமான தோல்வியை அடையவில்லை எனவும், வெற்றிக்கும்,தோல்விக்கும் ஒருசில தொகுதிகளே வித்தியாசம் எனவும் அவர் கூறினார். இது ஒரு வெற்றிகரமான தோல்வி என்று வர்ணித்த தமிழிசை, மோடி அலை எந்த காலத்திலும் ஓயாது என்றார். இதுநாள் வரை வாக்கு இயந்திரங்களில் குளறுபடி உள்ளதாக கூறிய காங்கிரஸ் கட்சி மன்னிப்பு கேட்க வேண்டும் என அவர் கூறினார்.

Related Posts