மோடி, எடிப்பாடி அரசுகளை வீட்டிற்கு அனுப்ப வேண்டும்: மு.க.ஸ்டாலின்

தருமபுரி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் மருத்துவர் எஸ்.செந்தில்குமார் மற்றும் பாப்பிரெட்பட்டி சட்டபேரவை இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் ஆ.மணி ஆகியோரை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பாப்பிரெட்பட்டி தொகுதிக்குட்பட்ட நடுப்பட்டியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், தேர்தலுக்காக  வந்து போவர்கள்  நாங்கள் அல்ல  எனவும் எப்போதும் மக்களை சந்திப்பவர்கள் நாங்கள்  என்று தெரிவித்தார். 5 முறை கலைஞர் கருணாநிதி முதல்வராக இருந்தபோதுஆதிதராவிடர் ,பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு ஏராளமான நலத்திட்டங்களை செய்துள்ளார் என்று குறிப்பிட்ட அவர், மத்தியில் மோடியையும் தமிழகத்தில் எடுபிடியாக இருக்ககூடிய எடப்பாடி பழணிச்சாமியையும் வீட்டிற்கு அனுப்பவேண்டும் என்று கூறினார்

Related Posts