மோடி தலைமையிலான மத்திய அரசு தமிழகத்தை அனைத்து விதத்திலும் வஞ்சிக்கிறது: வைகோ

 

 

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, தமிழகத்தை அனைத்து விதத்திலும் வஞ்சித்து வருவதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம்  அமைக்க வலியுறுத்தி, காவிரி புரட்சி என்ற பெயரில், ஒரு நாள் தண்ணீர் அருந்தா போராட்டம் திருச்சியில் நடைபெற்று வருகிறது. தமிழர் வீர விளையாட்டு மீட்பு கழகம் சார்பில், காவிரி ஆற்றுப்படுகையில் நடைபெற்று வரும் போராட்டத்தை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தொடங்கிவைத்தார். அப்போது உரையாற்றிய வைகோ, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, தமிழகத்தை அனைத்து விதத்திலும் வஞ்சித்து வருவதாக குற்றம்சாட்டினார். மேலும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, போராட்டத்தில் ஈடுபட இளைஞர்கள் முன்வர வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

 தமிழர் வீர விளையாட்டு மீட்பு கழக மாநில தலைவர் ஜல்லிக்கட்டு ராஜேஷ் தலைமையில் நடைபெற்று வரும் போராட்டத்தில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொய்தீன், மணியரசன், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு, பி.ஆர்.பாண்டியன், பா.ம.க. சார்பில் உழவர் பேரியக்க தலைவர் ஆலய மணி மற்றும் பல்வேறு கட்சி நிர்வாகிகள், விவசாயிகள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர்.

Related Posts