மோடி மற்றும் அஜித் தோவல் மீது தாக்குதல் நடத்த தீவிரவாத இயக்கம் திட்டம்

பிரதமர் மோடி மற்றும் அஜித் தோவல் மீது தாக்குதல் நடத்த ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கம் திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

உரி மற்றும் புல்வாமா தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆக்கிரமிப்பு பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து, அங்கிருந்த ஜெய்ஷ் இ முகமது இயக்க முகாம்களை இந்திய ராணுவம் அதிரடியாக அழித்தது. அத்துடன், ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது. இதனால் இந்தியா மீது கடும் அதிருப்தியில் இருக்கும் ஜெய்ஷ் இ முகமது இயக்கம், பிரதமர் மோடி மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜய் தோவல் மீது செப்டம்பர் மாதம் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  ஜெய்ஷ் இ முகமது இயக்க தீவிரவாதிகள் இடையே நடைபெற்ற கடித உரையாடல்களையும் உளவுத்துறை கைப்பற்றியுள்ளது. இதனையடுத்து பிரதமர் மோடி மற்றும் அஜய் தோவலுக்கான பாதுகாப்பை அதிகரிக்க திட்டமிட்டுள்ள மத்திய அரசு, ஜம்மு, பதான்கோட் உள்ளிட்ட நாட்டின் 30 நகரங்களில் பாதுகாப்பை மேம்படுத்த உத்தரவிட்டுள்ளது.

Related Posts