மோடி ராமர் கோவில் கட்டாதது ஏன்? மம்தா பானர்ஜி

திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்குவங்காள மாநில முதலமைச்சருமான மம்தா பானர்ஜி நேற்று தனது மாநிலத்தில் ராய்கஞ்ச், இஸ்லாம்பூர் உள்பட சில இடங்களில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய அவர், வன்முறைகள் மற்றும் குழு கொலைகள் மூலம் அரசியலுக்குள் வந்தவர் மோடி. அவர் பாசிஸ்டுகளின் ராஜா. அடால்ப் ஹிட்லர் உயிரோடு இருந்திருந்தால், மோடியின் நடவடிக்கைகளை பார்த்து தற்கொலை செய்துகொண்டிருப்பார்.

பாரதிய ஜனதாவுக்கு எதிராக காங்கிரஸ் உறுதியாக போராட தவறிவிட்டதாக கூறிய அவர், மோடியை வெளியேற்றவே ஒவ்வொரு மாநிலத்திலும் கூட்டணிகள் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தார். தேர்தலில் மோடி வெளியேற்றப்பட்டதும் தாங்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து புதிய இந்தியாவை கட்டமைக்க பணியாற்றுவோம் என்று அவர்கூறினார்.


கடந்த 5 ஆண்டுகளாக மோடியால் அயோத்தியில் ராமர் கோவிலை கட்ட முடியவில்லை என்று குறிப்பிட்ட அவர், தேர்தல் வரும்போதெல்லாம் இந்த பிரச்சினையை கையில் எடுப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.


உளவுப்பிரிவினர் தாக்குதல் குறித்து தகவல் தெரிவித்த பின்னரும் புலவாமா தாக்குதலில் இத்தனை வீரர்கள் கொல்லப்பட்டது ஏன் என்பதற்கு அவர் முதலில் பதில் கூற வேண்டும் என்று கூறிய மம்தா,
நரேந்திர மோடி துரியோதனன் என்றால் அமித்ஷா துச்சாதனன் எனவும் இருவரும் சேர்ந்து நாட்டின் சுதந்திரத்தை பறிக்கப் பார்க்கிறார்கள் என்று தெரிவித்தார்.

Related Posts