ம.தி.மு.க.முன்னாள் செயலாளர் வாணி பிச்சையாவின் உடலுக்கு வைகோ  அஞ்சலி 

சங்கரன்கோயில் நகர மதிமுக முன்னாள் செயலாளர் வாணி பிச்சையா உடல் நலக்குறைவால் அவரது இல்லத்தில்  நேற்று காலமானார். தகவல் அறிந்ததும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வாணி பிச்சையாவின் இல்லத்திற்கு சென்று அவரது உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, திமுகவை தொடக்க நாள்  முதல் கட்டிக் காத்த வீரத்தியாகிகளில் ஒருவர் வாணி பிச்சையா எனவும் அவர் வைத்திருந்த ஒலி-ஒளி நிலையம், திமுகவின் ஒலி-ஒளி நிலையமாக திகழ்ந்த்தாகவும் குறிப்பிட்டார். தம்மை உயிருக்கு உயிராக நேசித்தவர் வாணி பிச்சையா எனவும், அவரது மகள் திருமணத்தின் போது அவரது துணைவியார் யோசனைப்படி கருப்புத்துண்டில் சிவப்பு எம்பிராய்டரி செய்து வாணி பிச்சையா அணிவித்த துண்டுதான் இந்த துண்டு எனவும் அவர் உருக்கத்துடன் தெரிவித்தார். அன்னாரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும் மதிமுக சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக வைகோ கூறினார்.

Related Posts