யானை மிரண்டு ஓடியதில் 18 பேர் படுகாயம்

இலங்கையில் புத்த விஹாரத் திருவிழாவின் போது யானை மிரண்டு ஓடியதில் 18 பேர் படுகாயமடைந்தனர்.

கொழும்பு அருகே உள்ள கோட்டே என்ற இடத்தில் உள்ள புத்த விஹாரத்தில் விழா நடந்து கொண்டிருந்தது. சில யானைகள் விழாவில் இடம் பெற்றிருந்தன. அவற்றில் எல் இ டி விளக்குகள் பொருத்தப்பட்டிருந்த முகத்திரை அணிந்திருந்த யானை ஒன்று திடீரென ஆவேசமடைந்து அருகில் இருந்தவர்களைத் தாக்கியது. அப்போது கீழே விழுந்தவர்களை காலால் உதைத்துக் கொண்டும், நசுக்கிக் கொண்டும் அது ஓடியது. இதில் 18 பேர் படுகாயமடைந்தனர். மிரண்டு ஓடிய யானை பல மணி நேர போராட்டத்திற்குப் பின் பிடிக்கப்பட்டது.

Related Posts