யாரை எங்கு உட்கார வைக்க வேண்டுமோ அங்கு உட்கார வைத்தால் அனைத்தும் சரியாக இருக்கும்

யாரை எங்கு உட்கார வைக்க வேண்டுமோ அங்கு உட்கார வைத்தால் அனைத்தும் சரியாக இருக்கும் என நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.

அட்லி இயக்கத்தில், நடிகர் விஜய் நடித்துள்ள பிகில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய நடிகர் விஜய், யாரை எங்கு உட்கார வைக்க வேண்டுமோ, அங்கு உட்கார வைத்தால் அனைத்தும் சரியாக இருக்கும் என தெரிவித்தார். மேலும், அரசியல் விளையாட்டில் ஈடுபடுங்கள் என்றும், விளையாட்டில் அரசியல் செய்யாதீர்கள் என்றும் அவர் கூறினார். சுபஸ்ரீ உயிரிழப்பு விவகாரத்தில் யார் மீது கோபப்பட வேண்டுமோ, அவர்கள் மீது கோபப்படாமல், யார் மீதோ பழிபோடுகிறார்கள் என்றும் விஜய் தெரிவித்தார். தன் பேனரை கிழித்துக்கொள்ளுங்கள் என்றும், ரசிகர்கள் மீது கை வைக்காதீர்கள் என்றும் விஜய் கூறினார். இசை வெளியீட்டு விழாவில் அவர் பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts