யாரோடு கூட்டணி சேர்ந்தால் பணம் வரும் என  யோசிக்கவில்லை

யாரோடு கூட்டணி சேர்ந்தால் பணம் வரும் என  யோசிக்கவில்லை என்று மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் இருந்து சென்னை திரும்பிய அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், 3-ஆவது அணி உருவாகும் என சொல்லவில்லை என்றும் தங்களோடு இணைய அழைப்பு விடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.  அதேபோல் தற்போது வரை தனித்து போட்யிடும் முடிவில் தான் இருப்பதாகவும்,  தங்கள் பலம் மக்கள் தான்  என்று கூறிய கமல் யாரோடு சேர்ந்தால் பணம் வரும் என்று யோசிக்கவில்லை என்றார். ரஜினியிடம் ஆதரவு கேட்பீர்களா என்ற கேள்விக்கு, ரஜினியின் ஆதரவு தனக்கு இருக்கும் என நம்புவதாகவும், , ஆனால் ஆதரவு என்பது  அவர்களே கொடுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்

Related Posts