யார் யாருடன் கூட்டணி என்பது குறித்து அதிமுக தலைமை முடிவு செய்யும்: அமைச்சர் ஜெயக்குமார்

 

 

யார் யாருடன் கூட்டணி என்பது குறித்து, அதிமுக தலைமை உரிய நேரத்தில் முடிவு செய்யும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை, ஏப்ரல்-24

சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது ;-

காவிரி மேலாண்மை வாரியத்துக்காக தமிழக அரசு அரசியல் நெருக்கடி அளித்தது. காவிரி மேலாண்மை வாரியத்திற்காக சட்ட நிபுணர்களிடம் ஆலோசிக்கப்பட்டது. காவிரி வாரியம் மற்றும் காவிரி நதிநீர் ஒழுங்காற்றுக் குழுவை மத்திய அரசு அமைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இதில் நாம் வெற்றி பெறுவோம். அதிமுகவும் பாஜகவும் இரட்டை குழல் துப்பாக்கி என்று ‘புரட்சி தலைவி நமது அம்மா’ நாளேட்டில் எழுதப்பட்ட கட்டுரைக்கு அரசியல் சாயம் பூக்கூடாது. அந்த கட்டுரை குறித்து நாளேட்டில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசுடன் தமிழக அரசு இணக்கமாக உள்ளது. கூட்டணி குறித்து உரிய நேரம் வரும்போதுதான் கட்சி தலைமை முடிவெடுக்கும். அதிமுகவில் முடிவெடுக்கக்கூடிய ஒற்றைத் தலைமை இல்லாததால் தான் குழப்பம் நிலவுவதாக கூறுவது தவறு. அப்படியான கருத்துக்கு இடம் கிடையாது. கமல்ஹாசன் அவ்வப்போது ட்விட்டர், யுடியூபில் பேசிக்கொண்டிருக்கிறார். இப்போது எஸ்எம்எஸ் வழியாகவும் பேச ஆரம்பித்து, இறுதியில் காணாமல் போய் விடுவார்.

இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். 

Related Posts