யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற பெண்: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து

தாம் போட்டியிடும் தொகுதியான வயநாட்டை சேர்ந்த பழங்குடியின பெண் ஸ்ரீதன்யா என்பவர் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றதை அறிந்த ராகுல், அவரை வாழ்த்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில் வயநாட்டை சேர்ந்த ஸ்ரீதன்யா தான் கேரள மாநிலத்தில், யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற முதல் பழங்குடியின பெண் என்று குறிப்பிட்டுள்ள ராகுல், கடின உழைப்பும், விடாமுயற்சியுமே அவரது கனவை நனவாக்கியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் ஸ்ரீதன்யாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தமது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாகவும் ராகுல் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Related Posts