யு.கே.பவர் நெட்வொர்க்ஸ் நிறுவனத்தைப் பார்வையிட்டார் எடப்பாடி பழனிசாமி

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, லண்டனில் இருந்து 150 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சஃபோல்க் என்ற இடத்தில் யு.கே.பவர் நெட்வொர்க்ஸ் நிறுவனத்தைப் பார்வையிட்டார்.

தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஈர்க்கும் விதமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் ஆகிய நாடுகளுக்கு 14 நாட்கள் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார்.

லண்டனில் இருந்து 150 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சஃபோல்க் என்ற இடத்தில் யு.கே.பவர் நெட்வொர்க்ஸ் நிறுவனத்தை இன்று பார்வையிட்டார்.

மேம்படுத்தப்பட்ட மின்சார உள்கட்டமைப்பு மற்றும் மின்விநியோகம், மின்சார கேபிள்கள் பராமரிப்பு உள்ளிட்டவை குறித்து அங்குள்ள அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார்.

லண்டன் மற்றும் இங்கிலாந்தின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் மின்சார கேபிள்கள், சாதனங்களைப் பொருத்துதல், பராமரித்தல் மற்றும் தரம் உயர்த்துதல் ஆகிய பணிகளை இந்நிறுவனம் கவனித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Related Posts