யூடியூப் தலைமை அலுவலகத்தில் துப்பாக்கிச்சூடு

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் அமைந்துள்ள யூடியூப் தலைமை அலுவலகத்தில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா : ஏப்ரல்-04

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் ப்ரூனோ பகுதியில் யூடியூப் தலைமை அலுவலகம் அமைந்துள்ளது. அங்கு நுழைந்த பெண் ஒருவர் அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். பின்னர் அவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டார். இதையடுத்து அலுவலகத்தில் இருந்தவர்கள் கைகளை மேலே தூக்கியபடி அலுவலகத்தை விட்டு வெளியேறினர். உடனடியாக அங்கு சென்ற காவல்துறையினர், காயமடைந்த 4 பேரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் துப்பாக்கிச்சூடு நடத்திய பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். துப்பாக்கிச்சூடு நடத்திய பெண் யார்? எதற்காக யூடியூப் அலுவலகத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தினார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Related Posts