யோகி ஆதித்யநாத்-க்கு72 மணி நேரமும், மாயாவதிக்கு 48 மணி நேரமும் பிரச்சாரம் செய்ய தடை : தேர்தல் ஆணையம் உத்தரவு

உத்தரபிரதேசத்தில் கடந்த 7-ஆம் தேதி நடைபெற்ற பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் பேசிய பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, முஸ்லிம் வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை சிதற விடாமல் மெகா கூட்டணிக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கடந்த 9-ஆம் தேதி நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய முதல் அமைச்சர் யோகி ஆதித்யநாத், காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளுக்கு அலி மீது நம்பிக்கை உள்ளதாகவும், தங்களுக்கு பஜ்ரங்பலி மீது நம்பிக்கை இருப்பதாகவும் தெரிவித்தார். சாதி மதம் சார்ந்த பேச்சுகளை தேர்தல் பிரச்சாரங்களில் பயன்படுத்த தடை உள்ள நிலையில் இரு தலைவர்களும் பேசிய பேச்சுகள் சர்ச்சையை ஏற்படுத்தின. இதுதொடர்பாக  இருவருக்கும் தேர்தல் ஆணையம் ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்நிலையில் பொதுநல வழக்கொன்றை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம் இருவர் ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வி எழுப்பியது மேலு ஜாதி,மதங்களை முன் வைத்து ஆதாயம் தேடும்  வேட்பாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.  .இந்நிலையில் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள உத்தரவில் உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் நாளை காலை 6 மணி முதல் 72 மணி நேரத்துக்கு பிரச்சாரம் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.இதேபோல் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி நாளை காலை முதல் 48 மணி நேரத்துக்கு பிரச்சாரம் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related Posts