ரஜினி கூறிய கருத்து கோடிக்கணக்கான மக்களின் நெஞ்சை காயப்படுத்தி விட்டது

தூத்துக்குடியில் நடந்த கலவரம் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் கூறிய கருத்து கோடிக்கணக்கான மக்களின் நெஞ்சை காயப்படுத்தி விட்டதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

கோவை : மே-31

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில், பவானி நதி மாசடைதல் குறித்த விழிப்புணர்வு புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தனது துணைவியாருடன் கலந்து கொண்டனார். விழாவில், பவானி நதி மாசடைதல் குறித்த புத்தகத்தை வைகோ வெளியிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் மீது தேச துரோக குற்றச்சாட்டின் கீழ், காவல்துறையின் மூலம் அடக்குமுறை வழக்கை தமிழக அரசு ஏவியுள்ளது என்று குற்றம்சாட்டினார். தூத்துக்குடி சம்பவம் தொடர்பான தமது கருத்துகள் கோடிக்கணக்கான மக்களின் நெஞ்சத்தை காயப்படுத்தி விட்டது என்பதை என்றைக்காவது ஒருநாள் ரஜினிகாந்த் உணருவார் என்று வைகோ தெரிவித்தார்.

Related Posts