ரஜோரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீ

ஜம்மு-காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் ஏற்பட்ட தீயை தீயணைப்புத்துறையினர் பல மணிநேரம் போராடி அணைத்தனர்.

ஜம்மு-காஷ்மீர் : மே-17

ஜம்மு-காஷ்மீரின் பாபா குலாம் ஷா பல்கலைக்கழக வளாகத்தை ஒட்டிய வனப்பகுதியில் தீ பரவியது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர், பல்கலைக்கழக வளாகத்தை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொண்டனர். பின்னர், காட்டுத் தீயை போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் காட்டுத் தீயால் ஏராளமான மரங்களும் செடி கொடிகளும் தீயில் கருகிவிட்டதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Related Posts